சங்கு சைக்கிள் கூட்டணிக்கு உதவிய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்

Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Independent Writer Jun 18, 2025 11:35 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

36 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் சங்கு சைக்கிள் கூட்டணிக்கு ஆட்சியை அமைத்துள்ளது.

சங்கு சைக்கிள் கூட்டணிக்குயின் வெற்றிக்கான இரகசிய வாக்கெடுப்பிற்கு  தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் உதவியதாக கூறப்படுகிறது.

இந்த விடயத்தினை வடக்கின் சில ஊடகவியளாளர்கள் தமது முகநூல் பதிவுகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த தவிசாளர் தெரிவில் மூன்று வேட்பாளர்கள் முன்மொழியப்பட்டுள்ளனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் செல்வத்திசைநாயகம் தவநாயகம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் தியாகராஜா நிரோஸ் தேசிய மக்கள் சக்தி சார்பில் சிவசுப்பிரமணியம் சுகிர்தரூபன் ஆகியோர் போட்டியிட்டனர்.

ஜனாதிபதியின் ஜெர்மனிக்கான விஜயம் குறித்து பரப்பப்படும் செய்திகள்.. நீதிமன்று பிறப்பித்த உத்தரவு

ஜனாதிபதியின் ஜெர்மனிக்கான விஜயம் குறித்து பரப்பப்படும் செய்திகள்.. நீதிமன்று பிறப்பித்த உத்தரவு

இரகசிய வாக்கெடுப்பு

தவிசாளர் தெரிவை இரகசிய வாக்கெடுப்பா பகிரங்க வாக்கெடுப்பா என்பதை முடிவுசெய்வதைக் கூட பகிரங்கமாக கேட்காமல் இரகசியமான முறையில் வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ள வேண்டும் என NPP கோரிய நிலையில் சட்டதிட்டங்களின் பிரகாரம் அதனை செய்யமுடியாது என உள்ளூராட்சி ஆணையாளர் நிராகரித்தார்.

சங்கு சைக்கிள் கூட்டணிக்கு உதவிய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் | Member Npp Who Helped Govern Valikamam East Ps

அதன்பின் தவிசாளர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு முறையில் மேற்கொள்வதா அல்லது பகிரங்க வாக்கெடுப்பு முறையில் இடம்பெறுவதா என உறுப்பினர்களிடத்தில் கருத்துகேட்டபோது 14 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பையும் 22 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பையும் கோரினர். அதன்பிரகாரம் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.  

தவிசாளர் தெரிவிக்கான இரகசியவாக்கெடுப்பில்  தி.நிரோஸ்- 16 வாக்குகளையும்,  செ.தவநாயகம்- 11 வாக்குகளையும், திசைகாட்டி - சி.சுகிர்தரூபன்- 9 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் முதலாவதாக வந்தவரை விட ஏனைய இருவர்களின் வாக்குகளின் கூட்டுத் தொகையும் அதிகமாக காணப்பட்டதால் மூன்றாவதாக வந்த தேசிய மக்கள் சக்தியின் சிவசுப்பிரமணியம் சுகிர்தரூபன் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு ஏனைய இருவருக்கும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

முன்னர் வாக்கெடுப்பு நடுநிலைமை கோரிய நிலையில் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பை இரகசியமா பகிரங்கமா என உறுப்பினர்களிடம் கேட்காமல் பகிரங்க வாக்கெடுப்பாக நடாத்துமாறு தியாகராஜா நிரோசினால் உள்ளூராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஈரானை சுற்றிவளைத்த இஸ்ரேலின் போர் விமானங்கள்! தாக்கி அழிக்கப்பட்ட எமாட் ஏவுகணை

ஈரானை சுற்றிவளைத்த இஸ்ரேலின் போர் விமானங்கள்! தாக்கி அழிக்கப்பட்ட எமாட் ஏவுகணை

திருவுளச்சீட்டு முறைமூ

எனினும் அதனை உள்ளூராட்சி ஆணையாளர் மறுத்து மீண்டும் உறுப்பினர்களிடம் கேட்க தவிசாளர் தெரிவின் இரண்டாம் சுற்றில் பகிரங்க வாக்கெடுப்பு வேண்டும் என 14 உறுப்பினர்களும் இரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என 14 உறுப்பினர்களும் நடுநிலை என 8 உறுப்பினர்களும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் திருவுளச்சீட்டு முறைமூலம்  இரகசிய வாக்கெடுப்பு என தீர்மானிக்கப்பட்டது.

சங்கு சைக்கிள் கூட்டணிக்கு உதவிய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் | Member Npp Who Helped Govern Valikamam East Ps

தவிசாளர் தெரிவிற்கான இரண்டாம் சுற்று இரகசியவாக்கெடுப்பில்(28 வாக்குகள்)  தி.நிரோஸ்- 15 வாக்குகளையும், செ.தவநாயகம்- 12 வாக்குகளையும் நிராகரிக்கப்பட்டதாக ஒரு வாக்கும் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், தவிசாளராக தியாகராஜா நிரோஷ் தெரிவானார்.

இங்கு இரகசிய வாக்கெடுப்பிற்கு தேசிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினர் ஆதரவளிக்காது விடின் 14:13 என்ற கணக்கில் பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றிருக்கும்.

அவ்வாறு பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தால் அளிக்கப்பட்ட 28 வாக்குகளில் 1 நிராகரிக்கப்பட மீதமுள்ள 27 வாக்குகளில் கட்சி தீர்மானங்களின் படி பெரும்பாலும் வீட்டிற்கு 14 வாக்குகள்(வீடு - 11, மான் -2, வீனை -1) என கட்டாயம் செலுத்தப்பட்டிருக்கும்.

மீதம் உள்ள வாக்குகளான 13 வாக்குகள் மாத்திரமே சங்கு சைக்கிள் கூட்டிற்கு கிடைத்திருக்கும்.

ஆகமொத்தத்தில் இந்த போட்டியில் வெற்றயை தீர்மானித்தவர் தேசிய மக்கள் சக்தி சார்பில் இரகசிய வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்த உறுப்பினரே என கூறப்பட்டுள்ளது.

வெடித்துச் சிதறிய ஈரானின் இராணுவத் தளங்கள்.. இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்

வெடித்துச் சிதறிய ஈரானின் இராணுவத் தளங்கள்.. இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US