வத்திக்கானுக்கு விஜயம் செய்யவுள்ள மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எதிர்வரும் 24ம் திகதி மீண்டும் வத்திக்கானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸின் அழைப்பின் பேரில் அவர் இவ்வாறு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வருகையை பாப்பாண்டவர் கட்டாயப்படுத்தியுள்ளார் என கத்தோலிக்க சபையின் பேச்சாளர் ஒருவர் தெற்கு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கர்தினால்களை நியமிக்கும் நிகழ்வு
எதிர்வரும் 27ஆம் திகதி கர்தினால்களை நியமிக்கும் நிகழ்வில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் பங்கேற்கவுள்ளார்.
இந்த விசேட நிகழ்வில் உலகம் முழுவதிலும் உள்ள 120 கர்தினால்கள் பங்கேற்கவுள்ளனர்.
பாப்பாண்டவரோடு கலந்துரையாடல்

மூன்று நாட்கள் வத்திக்கானில் கர்தினால் தங்கியிருந்து இலங்கையின் நிலைமைகள் குறித்து பாப்பாண்டவரிடம் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam