அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞனின் விபரீத முடிவு
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உயிர் மாய்த்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
புத்தளத்தை சேர்ந்த 23 வயதான மனோ யோகலிங்கம் என்ற இளைஞன், தமக்கு தாமே தீ மூட்டிக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
புகலிடம் கோரி நீண்டகாலமாக விசாவிற்கு காத்திருந்த நிலையில், மன உளைச்சல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய புகலிடக்கொள்கை
குறித்த இளைஞனின் மரணத்திற்கு, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக்கொள்கையே அவரின் மரணத்திற்கு காரணம் என தமிழ் அகதிகள் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையில் நிலவிய போர் அச்சம் காரணமாக அவர் தனது 11ஆவது வயதில் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இலங்கை அகதிகள்
இந்தியாவில் இருந்த படகு மூலம் அவர் அவுஸ்திரேலியா சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பல ஆண்டுகள் கடந்த போதும், புகலிட கோரிக்கையை அங்கீகரிக்காத பட்சத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மேலும் பல இலங்கை அகதிகள் இவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளதாக, தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
