ட்ரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து அச்சம் வெளியிட்டுள்ள மெலானியா ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக்(Donald Trump) கொலை செய்ய முயன்ற விடயம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை உருவாகியுள்ள நிலையில், அந்த விடயம் தங்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளதாக ட்ரம்பின் மனைவி மெலானியா (Melania) தெரிவித்துள்ளார்.
மேலும், ட்ரம்ப் பல்வேறு வழக்குகளில் சிக்கி நீதிமன்றத்துக்கும் வீட்டுக்கும் அலைந்துகொண்டிருந்த நிலையில், நீண்ட நாட்களாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்துவந்தார் எனவும் கூறியுள்ளார்.
இரகசிய பாதுகாப்பு சேவை
இது குறித்து மெலானியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, என் கணவரை அந்த பயங்கர குண்டு தாக்கியதைக் கண்டபோது, என் வாழ்வும், என் மகன் வாழ்வும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு விடயத்தை எதிர்கொள்ள இருப்பதாக உணர்ந்தேன்.
— MELANIA TRUMP (@MELANIATRUMP) July 14, 2024
அதாவது, தங்கள் வாழ்வே மாறும் ஒரு நிலை காணப்பட்டது. அத்துடன், என் கணவரை பாதுகாப்பதற்காக, தங்கள் உயிரைப் பணயம் வைத்து தைரியமாக செயல்பட்ட இரகசிய பாதுகாப்பு சேவை முகவர்களுக்கும் சட்டத்துறை அதிகாரிகளுக்கும் நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri