மெகசின் சிறைச்சாலையில் பாரிய நெரிசல் : குழப்பங்கள் வெடிக்குமென சபையில் எச்சரிக்கை
அதிகபடியான நெரிசலால் மெகசின் சிறைச்சாலை "வெடிக்கத் தயாராக" இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவு தலைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயங்களை முன்வைத்தார்.
அதிகப்படியான நெரிசல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் சிறைச்சாலைகளின் உத்தியோகபூர்வ கொள்ளளவு 10,750 ஆக இருக்கும் நிலையில், தற்போது சுமார் 37,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிகப்படியான நெரிசல் நிலைமை காரணமாக, சிறைச்சாலைகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அதிகபடியான நெரிசலால் மெகசின் சிறைச்சாலை "வெடிக்கத் தயாராக" இருக்கிறது.
மக்கள் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நாமல்! அம்பலமாகியுள்ள ராஜபக்சர்களின் சித்து விளையாட்டுக்கள்.

இரவு நேரங்களில் சுமார் 500 கைதிகள் நிற்கின்ற நிலையிலேயே உறங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கைதிகளுக்குப் போதுமான கழிப்பறைகள் வசதிகள் இல்லை.
இந்த நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் சிறைச்சாலைகளில் பாரிய குழப்பங்கள் வெடிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |