மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலையான இளைஞன்
காலி - மீட்டியாகொட பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் லிந்துலை - அக்கரப்பத்னை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நேற்று (03) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்திய போது அவரை காலி மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் லங்காகனி பிரபுத்திகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைமறைவு..
லிந்துலை - அக்கரப்பத்னை, ஹோல்புறுக் பகுதியில் மனைவியின் வீட்டில் தலைமறைவாக இருப்பதாக தலவாக்கலை சிறப்பு விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து 31 வயதுடைய இளைஞன் ஒவரை கைது செய்யப்பட்டார்.

அவர் நேற்று முன்தினம் (02) குற்றச் செயலுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் அக்கரபத்தனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் மேலதிக விசாரணையின் பின்னர் குறித்த நபரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தினர். மீட்டியாகொட பகுதியில் கடந்த (01) மதியம் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri