ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மைத்திரி தரப்பு சந்திப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் சிறிலங்கா சுத்திரக்கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு எதிர்வரும்21ம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகயினை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனும் சுதந்திரக் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்த சந்திப்பிற்கான திகதி இன்னும் குறிக்கப்படவில்லை.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்திலும், பிரதமருடனான பேச்சுவார்த்தை அலரிமாளிகைளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதேவேளை, அரசாங்கத்தின் பங்காளியிலிருந்து விலகுமாறும், சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், அண்மையில் நடந்த மத்தியக்குழுக் கூட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தனர்.
எனினும், நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு அவ்வாறான தீர்மானங்களை எடுக்காமல், அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் பேச்சுவார்த்தை ஈடுபடுவதற்கே சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
அந்த வகையிலேயே இந்த சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri