புதுச்சேரி மாநில முதலமைச்சரை சந்தித்த சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம்
சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் இணைந்து புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமியை அவரது இல்லத்தில் இன்றைய தினம் சந்தித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து, இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு அமைய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி முதலமைச்சர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை கேட்ட முதலமைச்சர், மத்திய அரசுக்கு எடுத்துரைப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் சமதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் என்.ஏ.கோன், சமதா கட்சியின் தமிழ் நாடு மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மணிவண்ணன், இளைஞர் அணி பொறுப்பாளர் வர்மா, சமதா கட்சியின் புதுச்சேரி மாநிலத்தலைவர் தினகரன், பொதுச்செயலாளர் ராஜகுரு, ஈழத்தமிழர் நட்புறவு மைய பிரதிநிதிகள் பேராசிரியர் ராமு.மணிவண்ணன் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri