யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி நல்லை ஆதீனத்துடன் சந்திப்பு (Video)
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, நல்லை ஆதீனத்துடன் சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளைத் தளபதி இன்றைய தினம் மரியாதை நிமித்தம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
நல்லை ஆதீனத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ கட்டளைத் தளபதிக்கு நல்லை ஆதீனம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தோடு இராணுவ தளபதியினால் நினைவுப் பரிசும் கையளிக்கப்பட்டது.
குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த நல்லை ஆதீன குரு முதல்வர்,
புதிதாகப் பதவியேற்றுள்ள யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி என்னை இன்று மரியாதை நிமித்தம் சந்தித்தார். அவர் புத்தாண்டுக்காக என்னை வந்து சந்திப்பதாகத் தெரிவித்திருந்தார்.
தற்போதைய யாழ். மாவட்ட நிலை தொடர்பில் விளக்கமாகக் கேட்டறிந்து கொண்டதோடு அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்து விக்கிரகங்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறும் கோரியுள்ளேன். அத்துடன் எதிர்வரும் தைப்பொங்கல் உற்சவத்தினை இந்து மக்கள் அனைவரும் சுதந்திரமாகக் கொண்டாடுவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறும், கிராமங்களில் ஆலய வழிபாட்டுக்கு இராணுவத்தினரால் இடையூறு ஏற்படாதவாறு செயற்படவேண்டும்.
குறிப்பாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று பொதுமக்கள் தமது வழிபாடுகளையும் மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறும், எதிர்வரும் புத்தாண்டு நிகழ்வினை பொது மக்கள் பட்டாசு கொளுத்தி சுதந்திரமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், தற்போதைய நிலையில் இனங்களுக்கிடையில் விரிசல் நிலை ஏற்படுகின்ற நிலை காணப்படுகின்றது.
இது தொடர்ந்தால் பெரிய ஒரு பிரச்சினையாக உருவெடுக்கும் அதனை நிறுத்துவதற்கு தங்களாலான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளையும் இன்றைய சந்திப்பின் போது நான் எடுத்துரைத்தேன்.
அதற்குப் பதில் அளித்த இராணுவ கட்டளைத் தளபதி இவை தொடர்பில் தான் உரிய
நடவடிக்கையைச் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி எடுப்பதாகவும் தெரிவித்தார்
என்றார்.



அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
