மண்முனை மேற்கு பிரதேசத்தில் திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம்(Video)
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரங்களுக்கு எதிர்வரும் 2022ம் ஆண்டில் வழங்கப்படவுள்ள நிதிக்கான திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் நடைபெற்றுள்ளது.
வவுணதீவு பிரதேச செயலகத்தில் நேற்று (27) பிற்பகல் குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இப்பிரதேசத்திலுள்ள 10 வட்டாரங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட திட்டங்களின் முன் மொழிவுகளைப் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம பிரதிநிதிகள் போன்றோர் இணைந்து திட்டங்களை ஆராய்ந்து சமர்ப்பித்தனர்.
ஒரு வட்டாரத்திற்கு 40 இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் மேற்படி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
கட்சியின் பொதுக் செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனை மேற்கு பிரதேச சபை
தவிசாளர் சண்முகராஜா, பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.




காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
