இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தவர்களுக்கும் ஜீவன் தொண்டைமானுக்கும் இடையிலான சந்திப்பு
இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தவர்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டைமானுக்கும்(Jeevan Thondaman) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு கொழும்பு சௌமிய பவனில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆசிரியர் தொழிற்சங்க பிரச்சனைகளை விரைவில் தீர்த்துத் தரும்படி அமைச்சிடம் கேட்டுக்கொண்டனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் தொழிலாளர்களின் நலன்களைச் சார்ந்தே செயற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், இலங்கை
தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் கணபதி கனகராஜ் ஆசிரியர் தொழிற் சங்கத்தின்
செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்.


