சேருநுவர பகுதியில் மணல் அகழ்வு தொடர்பான சட்டவிதிகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் அனுமதிகளைப் பெற்று மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்காக மணல் அகழ்வு தொடர்பான அரச சட்டவிதிகள் குறித்து தெளிவூட்டும் சிறப்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டம் நேற்று மாலை (12) சேருநுவர பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கந்தளாய் பிராந்திய உயர் பொலிஸ்மா அதிபர் எல்.எம். சஜ்ஜீவ பண்டார பங்கேற்றினார் மணல் அகழ்வுக்கான சட்டவிதிகள், நடைமுறைகள் மற்றும் அவற்றை மீறினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.
சட்டவிதிகள்
முக்கியமாக கலந்துரையாடப்பட்ட விடயங்கள்: அனுமதிப் பத்திரம் இல்லாமல் மணல் அகழ்வு மேற்கொண்டால் என்ன நடைபெறும், எந்த இடங்களில், எவ்வாறு மணல் அகழ்வு செய்யலாம், மணல் ஏற்றும் வாகனங்களின் அளவுகள் பற்றிய கட்டுப்பாடுகள் மணல் அகழ்வுக்கான அனுமதி பெறும் நடைமுறை சட்டத்தை மீறுவோருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகைதந்து மணல் அகழ்வு மேற்கொள்வதில் ஏற்படும் சட்ட சிக்கல்கள் இந்த நிகழ்வில் மணல் அகழ்வில் ஈடுபடும் தொழிலாளர்களும், தமது கருத்துக்களையும் சந்தேகங்களையும் முன்வைத்தார்கள்.
இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் சட்டத்திற்கிணங்க செயல்பட முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
