வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டம் ஆரம்பம்
தமிழ்த்தேசிய பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகளும், வடக்கு, கிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதின முதல்வர்கள், மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் வவுனியா இறம்பைக்குளம் தேவாலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது.
இதில் ஜெனிவா அமர்வு தொடர்பாகவும், தமிழ்த்தேசிய பேரவை உருவாக்கம் தொடர்பாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
கூட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராயா, எம். ஏ.சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணாகரம், சிறிதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வேலன் சுவாமிகள், திருகோணமலை ஆயர் நோயல் இமானூவேல், மன்னர் ஆயர் இமானுவேல் பெர்ணாண்டோ, யாழ்.மறைவாட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம், தென்கையிலை ஆதினம் குருமுதல்வர் அகஸ்தியர் அடிகளார், திருமூலர் தம்பிரான் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை கூட்டம் ஆரம்பமாகிய நிமிடம்வரை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, அனந்தி சசிதரன், சிறிகாந்தா, சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கட்சிகளைச் சேர்ந்த எவரும் சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
