தேசிய மக்கள் சக்தியினருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பு
தேசிய மக்கள் சக்தியினருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்குமான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று(16.02.2024)யாழ்பாணம் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரசியல் நகர்வுகள்
தேசிய மக்கள் சக்தியின் வட மாகாண அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் யாழ் இணைப்பாளர் k.இளங்குமரன் ஆகியோரும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் தலைவர் சி.வேந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது சமகால தேசிய பிராந்திய சர்வதேச அரசியல் நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற அத்துமீறிய நில ஆக்கிரமிப்பு, எல்லை தாண்டிய மீன்பிடி, தமிழர் நில கடல் வளங்கள் அந்தந்த பிரதேச மக்களின் எதிர்பினையும் தாண்டி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுதல் போன்ற விடயங்களில் தேசிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் குரல் கொடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் இலங்கையி்ல் புரையோடிப்போயிருக்கும் இன பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியினர் முன்வைக்க போகும் தீர்வு திட்டம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.



சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri