பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் (Photos)
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்க்கும் பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் வைத்தியர் சுஹைர் எம்.எச். சஹீட்க்கும் இடையான சிநேகபூர்வமான சந்திப்பு, பலஸ்தீன தூதரகத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் பலஸ்தீன் - இலங்கை நட்புறவு தொடர்பான விடயங்கள் இரண்டு நாடுகளிலும் உள்ள மக்களின் சமகால சமூக, அரசியல் நிலவரங்கள் எனப் பரந்துப்பட்ட விடயப்பரப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பு அர்த்தப்பூர்வமான சந்திப்பாக அமைந்ததோடு எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றக்கூடிய அமைவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
கிழக்கு பிராந்தியத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பலஸ்தீன தூதுவருக்குப் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அழைப்பு விடுத்துள்ளார்.
அழைப்பை ஏற்றுக்கொண்ட தூதுவர் வருகை தருவதற்கான தயார்ப்படுத்தல்களை
ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளார்.







இந்த நடிகரை உங்களுக்கு நினைவு இருக்கா? பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
