கிண்ணியா உலமா சபையினருக்கும் பிரதி அமைச்சருக்குமிடையிலனா சந்திப்பு
வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் கிண்ணியா ஜம்மியத்தில் உலமா சபையினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (4) கிண்ணியா ஜம்யத்தில் உலமா சபை காரியாலயத்தில் இடம்பெற்றது.
கிண்ணியா ஜம்மியத்தில் உலமா சபையின் தலைவரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி அஸ்செய்ஹ் ஏ. ஆர். நசார் தலைமையில், இந்த சந்திப்பு இடம் பெற்றது.
சந்திப்பு
இதன்போது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள், கிண்ணியா கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் நிலவும் வெற்றிடங்கள், விவசாய நிலங்களுக்கான போக்குவரத்து பிரச்சனைகள், விளையாட்டு மைதான குறைபாடு, ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் தொடர்பான பிரச்சனைகள், பொதுபோக்குவரத்து பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக உலமா சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில், கிண்ணியா உலமா சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri