திருகோணமலை ஊடகவியலாளர் சங்கத்தினருக்கும் கனேடிய வர்த்தக ஆலோசகருக்கும் இடையிலான சந்திப்பு(Photos)
கனேடிய அரசியல் மற்றும் வர்த்தக ஆலோசகருக்கும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை அலஸ் தோட்டம் பகுதியிலுள்ள உல்லாச விடுதியொன்றில் இன்று (10) பிற்பகல் 12.30 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கனேடிய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தக ஆலோசகரான டேனியல் பூட் சமகால நிலவரம் பற்றிக் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களின் அபிவிருத்தி குறித்தும், ஊடகவியலாளர்களை வலுவூட்டல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பின்போது திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர்
ஏ.ஜே.எம். சாலி,எஸ்.சசிகுமார் மற்றும் திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினரும்
முன்னாள் ஊடகவியலாளருமான வடமலை ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டதும்
குறிப்பிடத்தக்கது.






