ஐ.எம்.எப் பிரதிநிதிகள் குழு - மத்திய வங்கி அதிகாரிகள் இடையே சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு இன்று (18) மத்திய வங்கி அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்க அமைச்சர்களை சந்திப்பதற்கும் இந்த குழு திட்டமிட்டுள்ளது.
இந்த சந்திப்பின் முடிவில், அவர்கள் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பான முன்னேற்றம் குறித்து தெரிவிக்கவுள்ளனர்.
கடன் வசதியின் நான்காவது தவணை
விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று (17) இலங்கைக்கு வந்தது.

இந்த விஜயத்தின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் நான்காவது தவணை இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. சர்வதேச நாணய நிதியம் நான்கு வருட கால நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி, அதன் முதல் தவணையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி 333 மில்லியன் அமெரிக்க டொலர்களும், டிசம்பர் 13ஆம் திகதி 337 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு விடுவிக்கப்பட்டது.
மூன்றாவது தவணையாக இந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி சர்வதேச நாணய நிதியத்தால் 336 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது.
]| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri