இந்து பௌத்த பொதுச்செயலாளருக்கும் நீதி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு (Photos)
இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கும் இலங்கை பௌத்த இந்து பேரவையின் பொதுச் செயலாளர் தேசமான்ய எம்.ரி.எஸ் இராமச்சந்திரனுக்கு மிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இச்சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய சூழல் பற்றியும் ஜேர்மன் சட்ட நிறுவனத்தின் ஒத்துழைப்பு பற்றியும் அமைச்சருக்குப் பொதுச்செயலாளரினால் விளக்கம் அளிக்கப்பட்டது.

அமைச்சர் தெளிவுபடுத்திய விடயம்
இதுவரை வடக்கு மாகாணத்தில் இருபத்தி மூவாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளைச் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளைத் தனது சொந்த நிதியில் இலவசமாகக் கற்பித்து வருவது தொடர்பில் அமைச்சருக்குத் தெளிவுபடுத்தினார்.

அமைச்சர் கேட்டுக்கொண்ட விடயம்
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், பலகோடி இலங்கை பணத்தை செலவு செய்த இராமச்சந்திரனினுடைய தாய்நாட்டுப்பற்றைப் பாராட்டுவதாகவும் தொடர்ந்து இன்றைய சூழலில் நீதி அமைச்சிற்கும் புதிய அரசாங்கத்துக்கும் ஆலோசகராக பணியாற்றுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம் வடக்கு மாகாணத்திற்கு அவரை யூன் மாத வார இறுதியில் நடை பெறவுள்ள எமது
மொழியியல் மாணவர்களின் சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்குப் பிரதம அதிதியாகக் கலந்து
கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட பொழுது அமைச்சர் அதனை ஏற்றுக்கொண்டார்.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam