கிண்ணியா நகரசபையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆளுநருடனான சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவுக்கும் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (03) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடல்
இந்த சந்திப்பில் கிண்ணியா நகர சபையில் நிலவுகின்ற ஆளணி பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, வருமானத்தை ஈட்டுவதில் இருக்கின்ற இடையூறுகள் மீன் சந்தை கட்டிட நிர்மாணம், கழிவு முகாமைத்துவ நிலையம் எதிர் நோக்குகின்ற சவால்கள், இடத்தட்டுப்பாடு, யானை வேலி அமைத்தல், சுற்றுலா துறையை மேம்படுத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.

கிண்ணியா நகர சபை சார்பாக முன்வைக்கப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை தான் எடுப்பதாக ஆளுநரினால் இணக்கமும் தெரிவிக்கப்பட்டதாக நகர சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



எதிர்பார்க்கப்பட்ட ஈரான் மீதான அழித்தொழிப்பு தாக்குதல் 5 மணி நேரம் முன்
குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: அதிரடி தாக்குதல் நடத்திய உக்ரைன் News Lankasri