கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் அமைப்பது தொடர்பான சந்திப்பு (Photos)
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் அமைப்பது தொடர்பிலான சந்திப்பு நெடுஞ்சாலைகள் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கிற்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பிரேமசிறிக்கும் இடையில் இன்று(29) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கருத்து தெரிவிக்கையில்,
”குறிஞ்சாக்கேணி பாலம் மிகவும் மோசமாக பாதிப்படைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அதனூடாக போக்குவரத்து செய்வதை தடை செய்துள்ளார்கள்.
நெடுஞ்சாலைகள் அமைச்சிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
நாட்டின் தற்போதைய பொருளாதாரம் படுமோசமாக இருக்கின்றது. இந்த நிலையில், குறைந்தபட்சம் பாலத்தின் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு Bailey Bridge மூலமாவது போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும்.
இதேவேளை, கடந்த வருடம் குறிஞ்சாக்கேணி பாலம் விபத்தின் போது பத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களின் உயிர் காவுகொள்ளப்பட்ட சம்பவம் நாட்டில் பாரிய பேசுபொருளுக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது” என தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு விடுமுறை கிடையாது! கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு |