அமெரிக்க தூதுவருக்கும் கடற்படை தளபதிக்கும் இடையே முக்கிய சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் இன்று (20) சந்தித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் பதவியேற்ற பின்னர், அவர்களுக்கிடையிலான முதலாவது உத்தியோகபூர்வ கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது.
இச் சந்திப்பின் போது, அமெரிக்கத் தூதுவர் மற்றும் கடற்படைத் தளபதி இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த மூத்த பாதுகாப்பு உதவியாளர் லெப்டினன்ட் கேணல் டிராவிஸ் காக்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை இணை லெப்டினன்ட் கமாண்டர் ரிச்சர்ட் லிஸ்டர் ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri