பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை, நாராஹேன்பிட அபயராமாதிபதியும் மேல் மாகாண பிரதான சங்கநாயக்கருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் வருகை தந்த ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பானது இன்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் (Dinesh Gunawardena) கலந்து கொண்டிருந்ததாக தெரியவருகிறது.
இதேவேளை, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வு வழங்குமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் தமது பிரச்சினைகளுக்கான ஸ்திரமான தீர்வு வழங்கப்படும் வரை பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளனர்.
மேலும், தமது தொழிற்சங்க நடவடிக்கையால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்பதுடன், அவ்வாறு மாணவர்கள் பாதிப்புகளுக்கு முகங்கொடுப்பத்திலிருந்து அவர்களைப் பாதுகாப்பது நிர்வாகிகளின் கைகளிலேயே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.



ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
