குருநாகல் பேராயர் ஹரல்ட் அந்தோனி பெரேராவை சந்தித்துள்ள ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் குருநாகல் பேராயர் ஹரல்ட் அந்தோனி பெரேரா ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குருநாகல் மறைமாவட்ட பேராயரும், இலங்கை பேராயர்கள் சங்கத்தின் தலைவருமான ஹரல்ட் அந்தோனி பெரேராவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்தச் சந்திப்பு இன்று மாலை நிகழ்ந்துள்ளது.
கத்தோலிக்க மத விவகாரங்கள்
இதன்போது பேராயரின் சுகநலன்களை விசாரித்து அறிந்துக்கொண்ட ஜனாதிபதி, கத்தோலிக்க மத விவகாரங்கள் குறித்தும் பேராயருடன் கலந்துரையாடியுள்ளார்.
குருநாகல் மறைமாவட்ட துணைப் பேராயர் பியல் ஜானக பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam
