யாழ்.மாநகர முதல்வருக்கும் ஐப்பானிய தூதுவருக்கும் இடையே சந்திப்பு (Photos)
யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் ஜப்பானிய தூதுவர்
ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று யாழ். மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.
யாழ். மாநகர சபையில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலனும் பங்குப்பற்றியிருந்தார்.
இச் சந்திப்பில் ஜப்பான் கடந்த காலங்களில் யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் மேற்கொண்ட பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு யாழ்.மாநகர முதல்வரால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பல்வேறுபட்ட தரப்புக்களுடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் தூதுவர் சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கையில் சமாதானம் நிலவிய காலத்தில் ஜப்பானால் சமாதான பேச்சுவார்த்தைக்கு காத்திரமான பங்களிப்பு செய்யப்பட்டது.
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு

குறிப்பாக இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி அந்த பணிகளிலே ஈடுபட்டிருந்தார்.
அதேபோன்று தற்சமயமும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பானிய அரசு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஜப்பான் உதவி வருகின்ற நிலையில் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்நிபந்தனையாக இலங்கையில் ஒரு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசுக்கு ஜப்பானிய அரசு விடுக்க வேண்டும் என்று மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஜப்பானிய தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.
இதன்போது மாநகர முதல்வரால் ஜப்பான் தூதுவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
| பணம் அச்சிடுவது தொடர்பில் பிரதமர் ரணிலின் புதிய அறிவிப்பு |
இதேவேளை,வடக்கிற்கான 3 நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்
மிசுகோஷி ஹிடேகி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.



சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam