பணம் அச்சிடுவது தொடர்பில் பிரதமர் ரணிலின் புதிய அறிவிப்பு
பணம் அச்சிடும் நடைமுறை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
பணம் அச்சிடும் நடைமுறை நிறுத்தப்படும என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணம் அச்சிடுவது நிறுத்தப்படும்
அடுத்த வருடத்தின் முற்பகுதி முதல் இவ்வாறு பணம் அச்சிடும் நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு வரவுள்ள எரிபொருள் தாங்கிய கப்பல்
எதிர்வரும் 24 நாட்களின் பின்னரே பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலே டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் கூறினார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் 11,000 மெட்ரிக் டன் டீசலே கையிருப்பில் உள்ளது. அத்துடன் 5,000 மெட்ரிக் டன்னுக்கும் குறைவான பெட்ரோலே கையிருப்பில் உள்ளது.
இவ்வாறான பின்னணியில், மீண்டும் 38,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் எதிர்வரும் 11 முதல் 15 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எம் சமரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் 35,300 மெற்றிக் டன் பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஜூலை 22 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வடிவேலுவின் கன்னத்தை கிள்ளி விளையாடும் ராதிகா! சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் நடக்கும் கூத்து - வைரலாகும் வீடியோ Manithan

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan
