இலங்கை அரசாங்கத்துக்கும் இறையாண்மை பங்குதாரர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பு
இலங்கை அரசாங்கத்துக்கும் இறையாண்மை பங்குதாரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றை நாளைய தினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்று (18.09.2024) நடைபெற்ற பிரசார பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, "இலங்கை அரசாங்கத்துக்கும் இறையாண்மை பங்குதாரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றை நாளைய தினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒப்படைக்கப்பட்ட பணி
அதன் பின்னர், இலங்கையின் திவால்நிலை உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வரும்.
இந்தநிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை முடித்துவிட்டதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்" என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுயுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |