மகிந்த தேசப்பிரியவுக்கும் ஈஸ்வரபாதம் சர வணபவனுக்கும் இடையே சந்திப்பு
ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை அறிவிக்கும் இறுதி நிமிடம் வரை, நாடளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளதாக இலங்கையின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்த அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மொகமட்டும் சமுகம் அளித்திருந்தார்.
நாடாளுமன்றத்தினை கலைப்பதற்கு
இந்த நிலையில் சந்திப்பையடுத்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற ஈஸ்வரபாதம் சரவணபவன் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை அறிவிக்கும் இறுதி நிமிடம் வரை, நாடளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளதாக மகிந்த தேசப்பிரிய தம்மிடம் கூறியதாக தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதன் முறையல்ல, முன்பும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமையை மகிந்த தேசபிரிய சுட்டிக்காட்டியதாக சரவனபவன் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக கருத்துரைத்த சரவனபவன் அதுதொடர்பில் தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை என குறிப்பிட்டார்.
அதே நேரம் தேர்தல்கள் தொடர்பில் பலரும் யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
