ஜப்பான் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள விசேட நிகழ்ச்சி:ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் (Mizukoshi Hideaki) இடையிலான சந்திப்பு ஒன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (24) இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில்,ஜப்பானிய பேரரசர் ஹிரோனோமியா நராஹிட்டோவின் வாழ்த்துக்களை ஜனாதிபதிக்கு தெரிவித்த தூதுவர் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
விசேட நிகழ்ச்சி

இதன்போது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, சென்பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டில் உரையாற்றி, 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஜப்பான் தூதரகமும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள விசேட நிகழ்ச்சி, செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பாகவும் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri