முல்லைத்தீவு மீனவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்குமிடையில் சந்திப்பு
முல்லைத்தீவு மீனவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் (Sumanthiran) இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது முல்லைத்தீவு, கள்ளபாடு பொது நோக்கு மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது மீனவர்கள் தாம் அன்றாடம் எதிர்நோக்குகின்ற மீன்பிடி நடவடிக்கை தொடர்பான பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
போராட்டங்களின் மூலமாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும், அனைத்தையும் சட்டரீதியாக தீர்த்துக் கொள்ள முடியாது.
குறிப்பாக தென்னமரவடிப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுடைய வயல் நிலங்கள் தொடர்பாக சட்ட ரீதியாக தீர்வு காணப்பட்டு நீதிமன்ற கட்டளையை பெற்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்காது இருக்கின்றனர்.
பௌத்த பிக்குகளை தம்மால் கைது செய்ய முடியாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடைய (Douglas Devananda) நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் கடல் வழியான மீனவர்களின் போராட்டத்தின் பின்னர் இந்திய தூதுவர், மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பாகவும் இங்கு வெளிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (Sumanthiran) மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் (Durairasa Ravikaran), சந்திரலிங்கம் சுகிர்தன்
(Chandralingam Sukeerthan) உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.






மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri