இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்துள்ள இந்திய கடற்படையின் தென் பிராந்திய கட்டளைத் தளபதி
இந்திய கடற்படையின் தென் பிராந்திய கட்டளைத் தளபதிக்கும், இலங்கையின் கடற்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பு பயிற்சிகளின் நிமித்தம், இந்திய கடற்படையின் ஆறு கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன.
இந்த நிலையில் குறித்த பயிற்சிகளை பார்வையிடும் முகமாக அந்த நாட்டின் தென் பிராந்திய கட்டளைத் தளபதி அனில் குமார் சௌலா (Anil Kumar Chawla) இலங்கைக்கு வந்துள்ளார்.
இலங்கையின் கடற்படைத் தளபதியை நேற்று சந்தித்த போது இரண்டு நாட்டு கடற்படைகளின் ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டதாக இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் சௌலா, இலங்கையின் வெளியுறவுச்செயலாளர், வான்படைத்தளபதி, ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கையில் இருந்து புறப்படும் முன்னர் திருகோணமலைக்கும் செல்லவுள்ளார் என தெரியருகிறது.








100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri