அரசாங்க அதிபர் - தன்னார்வு தொண்டு நிறுவனத்திற்கு இடையிலான விசேட கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரணுக்கும் சர்வதேச தன்னார்வு தொண்டு நிறுவனமான IOM ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று(20.02.2024) இடம்பெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இவ்விசேட கலந்துரையாடலின் போது இடப்பெயர்விற்கான சர்வதேச அமைப்பாகிய IOM நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் முறையான இடப்பெயர்வு தொடர்பாக மேற்கொண்ட திட்டங்கள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வமைப்பு நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை தற்போது நடைமுறைப்படுத்தி வருவதுடன் எதிர்காலத்தில் தனிநபரல்லாத சமுக மட்ட செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர ஆர். ஜதீஸ்குமார், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் என். நவனீதன் IOM நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.


புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 11 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam