நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் குவைத் தூதுவர் இடையே விசேட சந்திப்பு
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் மற்றும் குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாஃப் எம்.எம். பூ தாஹீர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (22) திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
குவைத்திற்கும் இலங்கைக்குமான நீண்டகால உறவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் இச்சந்திப்பின் போது நினைவுபடுத்தியதுடன் கடந்த காலங்களில் எமது நாட்டு மக்களுக்கு உதவியதற்காக தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அபிவிருத்தி திட்டம்
மேலும், திருகோணமலை மாவட்ட மக்களின் வாழ்வாதார நிலைப்பாடு, கல்வித் தேவைகள் மற்றும் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், வெளிநாட்டு வேலைவாவாய்ப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
