இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு அன்பளிப்பு
15 ஆயிரத்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருந்து தொகையை இந்திய அரசு இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.
இந்த மருந்து தொகையை இலஙகைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமணவிடம், கொழும்பு துறைமுகத்தில் வைத்து கையளித்துள்ளார்.
95 அத்தியவசிய மருந்துகள் அடங்கிய இந்த மருந்து தொகை இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கை மருந்து தட்டுப்பாட்டை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்புகளை மதிப்பதாகவும் சிரமமான அனைத்து நேரங்களிலும் அயல் நாடான இந்தியா வழங்கும் அனுசரணைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண, இந்திய உயர்ஸ்தானிகரிடம் கூறியுள்ளார்.



