சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு மருத்துவ பொருட்களை அனுப்பியதில் ஏற்பட்ட நெருக்கடி
அவசரகால பயன்பாட்டிற்காக சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சில பொருட்கள் தாமதமாகவே மக்களை அடைந்துள்ளதுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை சோசலிச ஜனநாயகக் கட்சியின் தமிழ் பிரிவின் முக்கியஸ்தராகவும், சுவிட்சர்லாந்தின் தொழிலதிபராகவும் இருக்கக்கூடிய ஸ்ரீ இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் இணைந்து கோவிட் தொற்று தொடர்பான அவசர கால பயன்பாட்டிற்கான நவீன மருத்துவ உபகரணங்களை சில வாரங்களுக்கு முன் இலங்கைக்கு அனுப்பியிருந்தோம்.
அவற்றையெல்லாம் தற்போது தான் வெளியிட்டுள்ளார்கள். இலங்கை அரசாங்கத்தின் ஊடாக தான் இந்த பொருட்கள் அனைத்தும் கிளியர் செய்யப்பட்டன.
இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விதிமுறைக்கு அமைய நாங்கள் அனுப்பிய பொருட்கள் மக்களை மிக தாமதமாக சென்றடைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
