விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு நடைமுறையாகும் புதிய திட்டம்
உயிரிழக்கும் விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களின் சாரதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ விளக்கமளிக்கின்றார்.
“தற்போது வாகன சாரதிகள், மதுபானம் மட்டுமின்றி போதைப்பொருட்களும் உட்கொண்டு வாகனங்களைச் செலுத்துகின்றனர்.
எதிர்காலத்தில், இதனை அடையாளம் காணும் வகையில் தேவையான உபகரணங்கள் உதவியுடன் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படும்.
உருவாக்கப்பட வேண்டிய திட்டங்கள்
மேலும், எதிர்காலத்தில், வீதி விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட சாரதிகள், மது, போதைப்பொருள் உட்கொண்டாரா என, மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்படுவர்.
இது தொடர்பில் போக்குவரத்துப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்த கலந்துரையாடல்களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவார்.
மேலும் உருவாக்கப்பட வேண்டிய பல திட்டங்கள் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |