கரவெட்டியில் தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம்
யாழ்ப்பாணம் - கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் கரவெட்டி கிழக்கு காட்டுப்புலம் சிவநேசன் ஞாபகர்த்த பொது நோக்கு மண்டபத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் யாழ் கிளையின் அனுசரணயில் தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த முகாமானது நேற்று(11.07.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம்
குறித்த மருத்துவ முகாமில் 41 பேருக்கு கண் பார்வை பாதிப்புக்களும், 3 பேருக்கு நீரிழிவு அதிகரிப்பும், ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தமும், 19 பேருக்கு பல் பிரச்சனையும் கண்டறியப்பட்டு மேலதிக வைத்திய ஆலோசனையும் வழங்கப்பட்டள்ளன.

இதன்போது கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய பிரிந்திகா செந்தூரன் தலைமையில் இடம்பெற்ற மருத்துவ முகாமில் பதில் சுகாதார வைத்திய அதிகாரி ரஞ்சன், பொதுச் சுகாதார பரிசோதகர்களான சிந்துஜன், ஆதவன், புவீந்திரன், அருட்குமரன், தாதியா உத்தியோகத்தர், குடும்பநல உத்தியோகத்தர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் யாழ் கிளையின் ஆளுநர் சபை உறுப்பினர் சதாசிவம் சதானந்தன், சிவநேசன் நினைவு மண்டப தலைவர் லோகேஷ்வரன், மற்றும் மருத்துவ ஆலோசனை பெற வந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.