இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Climate Change Maldives El Niño
By Theepan Jul 11, 2026 01:09 PM GMT
Report

மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் ஜூலை தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்துள்ளார்.

 யாழ் கலட்டி வீதியில் அமைந்துள்ள மிலேனியம் தனியார் விடுதியில் இன்று(11) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த எல்நினோ தொடர்பான விவசாய போதன ஆசிரியர்கள் மற்றும் கடற்தொழில் சார்ந்தவர்களுக்கான செயல்மர்வில் பங்கு பற்றிக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஈரானை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு உத்தரவு! 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் - ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு உத்தரவு! 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் - ட்ரம்ப் எச்சரிக்கை

எல்நினோ

இந்த சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும் மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது.

இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | El Ni O Is Approaching The Indian Ocean

இலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத் தீவு மன்னார் , கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும்.

நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்த சமுத்திரக்கடைபரப்பில் ஏற்படுகின்ற கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.

ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்சியையும் ஏற்படுத்தும்.

வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் - நெருக்கடியில் திணறும் இலங்கை பொருளாதாரம்

வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் - நெருக்கடியில் திணறும் இலங்கை பொருளாதாரம்

 அதிகமான வறட்சி

இருந்தாலும் இந்த தாள முக்கங்கள் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப் பகுதியிலே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில் அதுவரையான காலப் பகுதியில் அதிக வறட்சியே நிலவும்.

இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | El Ni O Is Approaching The Indian Ocean

ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர் முகாமைத்துவத்தை சரியாகப் பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

1503 ஆம் ஆண்டு பெருவில் ஏற்பட்ட எல்நினோ தாக்கம் 1503 ஆம் ஆண்டு உலகில் ஒன்பது இலட்சம் பேரை காவு கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது வரை ஐரோப்பாவில் 11 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

எல்நினோ தாக்கம் என்பது அதிக வெப்பத்தினால் பாரிய தாளமுக்கங்கள் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு மண்சாரிப்புகள் ஏற்படும், அல்லது அதிக வெப்பத்தினால் காட்டுத் தீ மற்றும் எரிமலை குழம்புகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தும்.

2016 ஆம் ஆண்டு இலங்கையில் எல்நினோ தாக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது 74 வருடங்களுக்குப் பின்னர் சூப்பர் எல்நினோ ஏற்பட போகிறது. இலங்கை மற்றும் மாலைதீவுகளில் இதன் தாக்கம் உணரப்படுகின்ற நிலையில், வட மகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கடத் தொழிலாளர்கள் இதன் தாக்கத்தை உணர்வார்கள்.

கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அதிக வெப்பம் காரணமாக கரையோர நீர் சூடாவதால் மீன்கள் இறந்துபோவதுடன் மீன் இனப்பெருக்கமும் குறைவடையும்.

விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கான நீரினை பெற்றுக் கொள்வதற்காக போராட வேண்டிய தேவை ஏற்படுவது உடன் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதற்கான நீர் தேவையும் சவால் மிக்கதாக மாறும்.

ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ அக்டோபர் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

இலங்கையை தாக்கிய டித்வா பேரிடர் ஏற்படும் போது வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆக காணப்பட்ட நிலையில் தற்போது எல்நினோ காலத்தில் 30 பாகை வரை வெப்பநிலை அதிகரிக்கும்.

ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர் முகாமைத்துவத்தை சரியாகப் பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறிரங்கன் யாழ் மாவட்ட கடத்தொழில் நீரயல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ் அகிலன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஜான்சன் பிரிடாரோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை எதிரொலி: 600 கைதிகள் மாற்றம் - விசாரணை தீவிரம்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை எதிரொலி: 600 கைதிகள் மாற்றம் - விசாரணை தீவிரம்

You May Like This..


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US