அரசாங்கம் ஆட்சி திறனை இழந்து விட்டது- முடிவுக்கு வந்துள்ள மருத்துவர்கள்!
பொதுமக்கள் விருப்பத்துக்கு மதிப்பளிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம், அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
நாட்டை அமைதியான முறையில் ஆட்சி செய்யும் திறனை அரசாங்கம் இழந்துவிட்டதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது
இந்தநிலையில், தீவிரமான சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் மேலும் வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த சங்கம் எச்சரித்துள்ளது.
இது போன்ற வன்முறைகள் தொடர்ந்தால், அது, சுகாதாரத் துறையை மேலும் சீரழிக்கும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நேற்று இரண்டு போராட்டத் தளங்களிலும் காயமடைந்த 220 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும்,23 பேர் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலகளை நடத்தியவர்கள் தடியடி மற்றும் தடிகளால் ஆயுதம் ஏந்தியிருந்தனர்,
எனவே இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை கண்டறியமுடியும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri