ஊடகவியலாளர் நிபோஜன் கொழும்பில் ஏற்பட்ட விபத்தில் மரணம் (video)
கிளிநொச்சியை சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் மரணமடைந்துள்ளார்.
கொழும்பு - தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஓய்ந்தது கிளிநொச்சியின் ஊடகக்குரல்
கிளிநொச்சியின் ஊடகப் பரப்பில் தனக்கெனத் தனியிடம் பிடித்திருந்த அன்புத்தம்பி நிற்சிங்கம் நிபோஜனின் திடீர் மரணம் எம் எல்லோருக்கும் தீராப்பெருவலியைத் தந்திருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்,மிகச்சொற்ப வயதில், தன்முனைப்பாலும், ஊடகத்துறை மீதான அதீத ஆர்வத்தாலும் அத்துறையின் ஆழ அகலங்களையெல்லாம் அறிந்த ஒருவனாக தன்னைத்தானே தகவமைத்துக்கொண்ட தம்பி நிபோஜன், இத்தனை அகாலத்தில் எமைப்பிரிவான் என நாம் யாரும் நினைத்தேனும் பார்த்ததில்லை.
ஓரிரு மணிநேரங்களின் முன்னர் என்னோடு தொலைபேசியில் உரையாடிய அந்தக் குரலொலி மறையும் முன்னரே அவனது உயிரும் பிரிந்திருக்கிறது.
அண்மைக்காலமாக எமைச் சார்ந்தவர்களிடையே நிகழ்ந்தேறும் ஏற்கவே முடியாத இளவயது மரணங்களின் நீட்சியில் இணைந்துகொண்ட தம்பி நிபோஜனின் ஆத்மா அமைதிபெறட்டும் என தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
தங்கமகள் சீரியலை தொடர்ந்து யுவன் மயில்சாமி நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புதிய விவரம் Cineulagam