விபத்து செய்திகளை வெளியிடும்போது ஊடகங்களுக்கு அமைச்சர் அறிவுரை
விபத்து செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் அதிகப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கம்பளை - தொழுவ பிரதேசத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்த விபத்துச் சம்பவம் குறித்த நாளிதழ் ஒன்றின் அறிக்கையைச் சுட்டிக்காட்டியே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாளிதழ்கள் முக்கியமான பொதுச்சேவையை வழங்கினாலும், குறிப்பிட்ட விபத்துச்செய்தியில் சாரதியின் பாலினத்தை (பெண் சாரதி) தேவையற்ற விதமாக வலியுறுத்தியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலின வேறுபாடு தவிர்ப்பு
"விபத்து பற்றிய செய்தியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், செய்தியில் 'பெண் சாரதி பிரேக்கிற்குப் பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தி விட்டார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது," என அந்த நாளிதழ் அறிக்கையை மேற்கோள் காட்டி அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் உரையாற்றுகையில்,
"இது சாரதி பெண் என்பதனால் நடக்கவில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது சாரதிகளுக்கு நடக்கக்கூடிய ஒரு விடயம்.

இந்தத் துறைக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய நாம் முயற்சிக்கும் இந்த நேரத்தில், இத்தகைய சம்பவங்களை 'பெண் சாரதி' அல்லது 'ஆண் சாரதி' என்று குறிப்பிடாமல், வெறுமனே 'சாரதி' என்ற சொல்லைப் பயன்படுத்தி செய்தி வெளியிடுமாறு ஊடகங்களை வலியுறுத்துகிறோம்.
ஏனெனில் அத்தகைய வேறுபாடுகள் ஒருவிதமான இழிவைக் கொண்டு வருகின்றன," என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்..
ஊடக அறிக்கைகளில் பாலின வேறுபாட்டைத் தவிர்த்து, தொழில் ரீதியாக 'சாரதி' என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து அவர் முக்கியமாக வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam