யாழில் பிராந்திய பத்திரிக்கை நிறுவனத்தினுள் புகுந்து தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Jenitha Apr 10, 2023 04:10 PM GMT
Report

யாழில் இயங்கும் பிராந்திய பத்திரிக்கை நிறுவனத்தினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மத போதகர் உள்ளிட்ட ஆறு பேரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அச்சுவேலிப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர், சிறுவர்கள், பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்களை கொண்ட குழு ஒன்று நேற்றைய தினம் (9.04.2023)  யாழில் இயங்கும் பிராந்திய பத்திரிக்கை நிறுவனமொன்றில் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். 

தாக்குதலின் பின்னணி 

கிறிஸ்தவ சபையின் போதகர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கி அச்சுறுத்தியமை தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

யாழில் பிராந்திய பத்திரிக்கை நிறுவனத்தினுள் புகுந்து தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Media Threat Jaffna Attack On Press Office

அது தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காகவே போதகர் தலைமையிலான குழுவினர் குறித்த பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குறித்த பத்திரிகை ஆசிரியர் பீடப் பணியாளர்களைச் சூழ்ந்து அச்சுறுத்தித் தாக்க முயன்றதுடன், பணியகத்துக்குள் பணியில் இருந்தவர்களை காணொளி பதிவு செய்து அச்சுறுத்தி அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், செய்தியை வழங்கியவர்களை அடையாளங்காட்ட வேண்டும் என்று அச்சுறுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இந்நிலையில் போதகர் உள்ளிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் பொலிஸாரினால் இன்றைய தினம் (10.04.2023) கைது செய்யப்பட்டனர்.

யாழில் பிராந்திய பத்திரிக்கை நிறுவனத்தினுள் புகுந்து தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Media Threat Jaffna Attack On Press Office

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரைக் கைது செய்யும் நடவடிக்கைள் யாழ்ப்பாண பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகின்றது. 

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US