அரசின் கொடூர நடவடிக்கையை அம்பலப்படுத்தும் புகைப்படம் : சுமந்திரன் பகிரங்கம் (Video)
தற்போது நாட்டில் நடக்கின்ற ஜனநாயக போராட்டங்கள் பலவற்றை எவ்விதமாக அரசாங்கம் அடக்குகிறது என்பதை குறித்து ஒரு தெளிவான படம் ஒன்று மக்களுக்குத் தெரியவந்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (13.03.2023) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அண்மையில் இராணுவ வீரர்கள் நீண்ட பொல்லு, தடிகளுடன் தனது ஆடையின் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்து களனி பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கும் சம்பவம் ஒன்று சென்ற வாரம் நடந்திருக்கின்றது.
அதற்கு இராணுவம், இது நாங்கள் இல்லை. வேறு யாரே செய்துள்ளனர் எனச் சான்று கூறியுள்ளனர். இது எங்களுக்கு ஒரு புதிதாக ஒரு விடயம் அல்ல.
ஏனென்றால், 2011ஆம் அளவெட்டிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தினை நடத்தி கொண்டிருந்த வேளையிலே, 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தபோது, இதே மாதிரியாக இராணுவச் சீருடையில் நீண்ட பொல்லு, தடிகளுடன் வந்து அங்கே மக்களைத் தாக்கினார்கள். எங்களையும் தாக்க முற்பட்டார்கள்.
அந்த சம்பவத்தைப் பற்றி கேள்வி எழுப்பிய போது, அது இராணுவம் அல்ல. வேறு யாரே செய்துள்ளனர் என்று இதே சான்றைத் தான் கூறினார்கள்.
யுத்தம் முடிவடைந்து 2 வருட காலத்துக்குள்ளே வேறொரு அணி, இராணுவச் சீருடையுடன் யாழ்ப்பாணத்திலே இவ்வாறு செயற்படுகின்றதா என்று கேட்டபோதுதான் இல்லை... இல்லை... அது நாங்கள் தான் என்று எம்மிடத்திலே இராணுவத்தினர் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 நிமிடங்கள் முன்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
