நாட்டில் ஊடக சுதந்திரம் பேணப்பட வேண்டும்: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
நாட்டில் இருக்க வேண்டும் ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும் ஊடக அடக்குமுறை என்பது இருக்கக் கூடாது, எல்லோருக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் 2.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 1.1 கிலோ மீற்றர் வீதி கார்பட் இடும் வேலைத்திட்டம் நேற்று திங்கட்கிழமை (22.01.2024) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கலந்து கொண்டு குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டங்கள்
இதன்பேது அவர் மேலும்தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுளள புதிய சட்டங்கள் தொடர்பில் சில விசேட கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
அந்த கலந்துரையாடலர்களின் போது கொண்டுவரப்படவுள்ள சட்டங்கள் சமூகத்திற்கு சாதகமாகவா, அல்லது பாதகமாக இருக்கின்றதா என்பது தொடர்பில் நன்கு ஆராய்ந்த பின்னர் நாம் அதுதொடர்பிலான முடிவுகளை நாம் எடுபபோம்.
கருத்துச் சுதந்திரம் எனப்பது இந்தநாட்டில் இருக்க வேண்டும். ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும்.
ஊடக அடக்குமுறை
ஊடக அடக்குமுறை என்பது இருக்கக் கூடாது. எல்லோருக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்க வேண்டும்.
அந்த கருத்துச் சுதந்திரம் நசிக்கப்படக் கூடாது, அது மிக முக்கியமானது ஏனெனில் ஒரு நாட்டினுடைய ஜனநாயகத்தினுடைய முதுகெலுலும்பு ஊடகமாகுமும், கருத்துச் சுதந்திரமுமாகும்.
எனவே அனைவருக்கும் இந்த நாட்டில் தமது கருத்துக்களை சுதந்திரமான வெளியிடும் நிலமை இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள், அமைச்சரின் இணைப்பாளர்கள், அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |