யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை கட்டுமானம் தொடர்பில் விகாராதிபதியின் முக்கிய அறிவிப்பு
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எந்த விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார்.
தையிட்டி விகாரையில் உள்ள விகாராதிபதியின் வாசஸ்தலத்தில் இன்று(30.12.2025) நடந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேரர் தரப்பு உறுதி
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டியில் திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 03ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் விகாராதிபதியாக நான் இடமளிக்கவில்லை.

தெற்கில் இருந்து புத்தர் சிலை எடுத்து வருவதாகவும், அன்றைய தினம் விசேட பெரஹரா நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் நான், அவ்வாறான எந்தவித விசேட அனுமதியும் கொடுக்கவில்லை.
அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என கோருகிறோன்.
அதேவேளை, தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக அரசாங்கத்தால் புதிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் எமது விகாரைக்கான ஆவணங்களை கையளித்துள்ளோம்.

அதே போன்று, காணியை உரிமம் கோரும் நபர்கள் கொடுத்த ஆவணங்களையும் கையளித்துள்ளோம். இந்த விவாகரம் ஒரு சட்டவிரோத செயல் என தீர்ப்பளிக்கப்பட்டால் அதையும் ஏற்க நான் தயார்.
விகாரை காணி விடுவிப்பு தொடர்பில், இதுவரை யாரும் என்னுடன் பேசவில்லை. அரசாங்கத்தின் குழு, விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்து விகாரை வளாகத்தில் எந்தவித புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என உறுதியளித்துள்ளார்.
முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில் News Lankasri