அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது - மகிந்த ராஜபக்ச
அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வது குறித்து ஊடகவியலாளர்கள் மகிந்தவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து தாம் கருத்து வெளியிடப் போவதில்லை எனவும் தம்மிடம் பழமையான கருத்துக்களே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இளம் அரசியல்வாதிகளே நாட்டின் அரசியல் நிலைமை பற்றி பேச வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மக்கள் அளித்த சிறப்புரிமைகளே காணப்படுவதாகவும் அரசாங்கம் சிறப்புரிமைகளை ரத்து செய்வது குறித்து கவலையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது வசித்து வரும் விஜேராமவில் அமைந்துள்ள இல்லத்தை விடவும் மெதமுலனவில் அமைந்துள்ள வீட்டில் வசிப்பது நிம்மதியானதும் மகிழ்ச்சியானதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா




