நாட்டு மக்களுக்கு தேரர் வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்
அரசியல்வாதிகளை மாற்றுவதில் எவ்வித பயனுமில்லை என பெப்பிலியானே ஶ்ரீ சுனேத்ராதேவி விஹாரையின் விஹாராதிபதி பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் (Medagoda Abayathissa Thero) தெரிவித்துள்ளார்.
நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் நேற்றைய தினம் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அந்த தரப்பினர் ஆட்சியில் இருந்த போது இவர்கள் சுகமா (செபத) என கேட்டார்கள். இப்பொழுது இந்த தரப்பிடம் அவர்கள் சுகமான என கேட்கின்றார்கள்.
மக்களில் மாற்றம் இன்றி அரசியல்வாதிகளை மாற்றுவதில் பயனில்லை. மக்கள் அறிவார்ந்த கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும்.
மக்களின் மனதை மாற்றாது செய்தால் தற்பொழுது வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிட்டு மீண்டும் வாபஸ் பெறுவது போன்றே நடக்கும் என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தாது இழிவுபடுத்தல்களை மேற்கொள்கின்றனர். இது எதிர்க்கட்சியின் கடமையன்று.
உரம் தொடர்பில் பிரச்சினை இருக்கவில்லை. இல்லாத பிரச்சினையொன்று உருவாக்கிக் கொள்ளப்பட்டது. பசுமை பொருளாதாரம் எது என்பது எனக்குத் தெரியவில்லை.
எந்த புத்திஜீவி இந்த ஆலோசனைகளை வழங்குகின்றார் என்பது புரியவில்லை. இதுவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் தீங்காகும் என குறிப்பிட்டுள்ளார்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan