மகாவலி ஆற்றில் கொட்டப்பட்ட இறைச்சி கழிவுகள்- கையும் களவுமாக சிக்கிய இருவர்..!
ஹட்டன் நகரப் பகுதியில் கோழி இறைச்சி கழிவுகளை மகாவலி ஆற்றில் கொட்டிய குற்றத்திற்காக இருவர் ஹட்டன் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்று(29.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கையும் களவுமாக சிக்கிய இருவர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹட்டன் பகுதியை சேர்ந்த இருவர், கோழி இறைச்சிக் கழிவுகளை லொறியில் கொண்டு சென்று மகாவலி ஆற்றில் கொட்டி வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்ட பொலிஸார், இருவரையும் பின் தொடர்ந்து லொறியுடன் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் லொறியையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது போன்று சுகாதார சீர்கேடு நடவடிக்கையில் ஈடுப்படுபவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan