சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இறைச்சி விற்பனை நிலையம் சீல் வைப்பு
மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் மாடு அறுக்கும் நிலையம் ஒன்றிற்கு மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது குறித்த விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது.
பல இலட்சம் வருமான இழப்பு
குறிப்பாக மாடுகளை அறுக்கும் பகுதி அசுத்தமாக காணப்பட்டமை, உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமை, விலங்கு கழிவுகள் சுற்றுப்பகுதிகளில் காணப்பட்டமை, கழிவு அகற்றும் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படாமை போன்ற பல்வேறு குறைபாடுகளின் அடிப்படையில் குறித்த நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டின் காரணமாக மன்னார் நகரசபைக்கு பல இலட்சம் வருமான இழப்பு ஏற்பட உள்ள போதிலும் மக்களின் சுகாதார வசதிகளை கருத்தில் கொண்டு நகரசபையும் குறித்த சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
