மனித கடத்தலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
மனித கடத்தலை (Human Trafficking)தடுப்பதற்காக விசாரணை அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினருடன் நேரடியான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும் கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனித கடத்தலுக்கு எதிரான செயலணியின் தலைமை பதவியில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து மாற்றங்களை செய்ய அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
இதனடிப்படையில், நீதியமைச்சு அந்த பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்தது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொலிஸ் மா அதிபர் இது சம்பந்தமாக சுற்றறிக்கையை வெளியிட்டார்.
இதன் மூலம் மனித கடத்தல் வர்த்தகம், கடத்தல் மற்றும் சமுத்திர குற்றச் செயல் விசாரணைப் பிரிவை ஏற்படுத்த அதிகாரம் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பல புலனாய்வுப் பிரிவுகளின் பிரதானிகளின் தலைமையில் இந்த செயலணிக் குழுவை நியமித்துள்ளார்.
அத்துடன் இதில் சில அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கை உட்பட தென் கிழக்காசிய நாடுகளை அடிப்படையாக கொண்டு வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் மனித கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
